எதிர்காலக் கனவுதனை காணாதார் இல்லை
இனிதான வாழ்வடைய விரும்பாரும் இல்லை !
மதிகொண்டத் திறத்தாலும் உழைப்பாலும் வாழ்வில்
மகத்தான உயர்வடைதல் தவறொன்றும் இல்லை !
விதியதனின் பலனாக இடர்கள்பலக் கண்டும்
வெற்றிதனை முடிவினிலே காண்பதுவே திறமை !
சதிராடும் வகைதன்னில் வாழ்ந்தவர்கள் வாழ்வும்
சரிந்தக்கதை உண்டு திறனற்ற தாலே !
இருப்பதனைக் காப்பதும் எளிதான ஒன்றே
என்றெண்ண வேண்டாம் , வாழ்கின்றப் போதில்
பொறுப்புடன் உழைத்துநாம் பொருளீட்ட வேண்டும்,
போதுமென் றயர்ந்திட போய்விடும் ஓர்நாள் !
மறுக்கவுந் தகுமோ, மறப்பதும் முறையோ ?
மாண்புடையக் குடிமகன் எனப்போற்றத் தகுமோ ?
பெருமைமிகு மைந்தனெனக் காண்பவர் போற்றும்
பெற்றோரின் கனவுதனை நனவாக்க வேண்டும் !
கனவினைக் கண்டிடச் சொன்னதும் அப்துல்
கலாமெனும் அறிஞனவன் ;
காலத்தினால் நல்ல அழியாப் புகழ்தன்னைக்
கண்டிட்ட மன்னவன் !
நனவென் றாக்கிட அதற்கென உழைப்பதும்
நம்மின் கடமையன்றோ ?
நாளையும் கோளையும் எதிர்பார்த் திருந்திட
நமைவெற்றி வந்தடையுமோ ?
தனதுநல் உழைப்பே உயர்வினைத் தருவது
தான்வுண்மை இதுதன்னை ,
தவறா துணர்வதே நாம்கொண்ட வாழ்வின்
தலையாயக் கடமையன்றோ ?
உனதுநல் எதிர்காலம் உன்றன்நற் கரங்களில் ,
உரைத்தவன் நரேந்திரன் ;
உன்னதங் காண்கின்றத் திறந்தனைக் கொண்டிட
உயர்வினைக் காண்பாயே !
கனவுகளே இல்லாது வாழ்ந்தவர்கள் இல்லை
காதல்முதல் வளமைவரை என்பதுதான் உண்மை !
நனவுகளென் றாக்குவதே வாழ்க்கையதன் வெற்றி
நயமுடனே வாழத்தான் சுற்றமதும் போற்றும் !
வினயமுற்றக் கனவுகளை காண்பதுதான் நன்றாம்
விகாரக் கனவுகளை தவிர்ப்பதுதான் முறையாம் !
தனகெனவோர் கனவதுவும் இருக்கத்தான் வேண்டும்
தரங்கொண்டக் கனவாக சிறப்பேதான் என்றும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது
போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

